காந்தாரா திரைப்பட வெற்றியை சித்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு ரிஷப் செட்டி கொண்டாடினார்.
கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார்.
ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் சேர்த்து நல்ல படமாக ரிஷப் கொடுத்திருக்கின்றார். கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றது.
இதனால் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்கள். இத்திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரிஷப் செட்டி மும்பையில் இருக்கும் சித்தி விநாயகர் கோவிலுக்கு இன்று காலை சென்று சாமி கும்பிட்டார். இதன்பின் வரும் வழியில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் ஒன்றாக அவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.