Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ்”… எந்த படம் தெரியுமா…????

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்படுகின்றது.

இந்திய திரைப்படங்களை ஜப்பானில் ஆர்வமுடன் பார்க்கின்றார்கள். ரஜினியின் முத்து திரைப்படத்திற்கு ஜப்பான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல திரைப்படங்கள் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்டு வருகின்றார்கள். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தையும் ஜப்பானில் வெளியிட்டார்கள். அண்மையில் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இத்திரைப்படம் வெளிவந்த முதல் நாளே ஒரு கோடி வசூல் செய்தது. தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற வருடம் வெளியான மாஸ்டர் திரைப்படத்தையும் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்ய இருக்கின்றார்கள். இத்திரைப்படத்தை அடுத்த மாதம் பல திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றார்கள். தற்போது மாஸ்டர் பட போஸ்டரை நகரம் முழுவதும் பல இடங்களில் ஒட்டி வருகின்றார்கள்.

Categories

Tech |