தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நரம்பியல் துறை தலைவர் மருத்துவர் சௌந்தர்யா தலைமை தாங்க, நரம்பியல் துறை மருத்துவ உதவி பேராசிரியர் தாமஸ் எட்வின் ராஜ் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அவர் கூறியதாவது, பக்கவாதத்திற்கான முதல் கட்ட அறிகுறிகளையும் அதன் பின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்தும் அதை எப்படி குணப்படுத்தலாம் என்பது குறித்தும் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.