சிம்பு திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்க சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே மனுஷ்யபுத்திரன்உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.
அண்மையில் திரைப்படத்தின் முதல் கட்டப்பட்ட பிடிப்பு நிறைவடைந்ததை சிம்பு போட்டோவை பகிர்ந்து கூறினார். தற்போது திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் இதில் சிம்பு அட்டகாசமாக நடனம் ஆடுவதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றது. இது குறித்த போட்டோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.