சாலையில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் 83,010 கடைகளில் உரிமையாளர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி குப்பை தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் கொடுக்க வேண்டும். நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டிருக்கின்றது.