பறவை காய்ச்சல் எதிரொளியால் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகின்றது.
கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மூலம் கிருமிகள் பரவாமல் இருப்பதற்காக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. தற்போது கறிக்கோழி பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகின்றது. இவ்வாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றது.