Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை”… தந்தை கண்முன்னே நேர்ந்த சோகம்….!!!!!

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் ஆனந்தி. அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற அக்டோபர் 31ஆம் தேதி மகளை அழைத்துச் செல்வதற்காக மணிகண்டன் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு வந்து காத்திருந்தார். மாணவி ஆனந்தி வகுப்பு முடிந்த பிறகு இரண்டாவது மாடியில் இருந்து மூன்றாவது மாடியில் இருக்கும் கழிவறைக்கு செல்வதாக கூறி திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதோடு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. உயிருக்கு போராடிய தனது மகளை பார்த்து மணிகண்டன் கதறி கதறி அழுதார். இதன்பின் அவருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் அன்று நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் காதல் விவகாரத்தில் தந்தை திட்டியதால் மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது‌. இதுகுறித்து போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |