பேருந்து-ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே இருக்கும் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா தனது மகள் மற்றும் மகனுடன் விளாத்திகுளம் மருத்துவமனைக்கு செல்வதற்காக பனையூரில் இருந்து ஆட்டோவில் சென்றார்கள்.
துளசிபட்டி விளக்கு பகுதியில் ஆட்டோ சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மகனும் மகளும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து டிரைவர் சுப்ரமணியனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.