நடிகர் விஷாலின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வருகின்றார். இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக விஷால் காசிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.
அவர் நண்பர்களுடன் இணைந்து காசியின் வீதிகளில் கோஷம் எழுப்பியவாறு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்று சிறப்பான தரிசனத்தை பெற்றதுடன் கங்கையின் புனித நீராடினேன். கோயிலை புதுப்பித்து அது இன்னும் சிறப்பாக மாற்றியதோடு எவரும் எளிதாக வரும்படி செய்ததற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதமர் மோடி காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது மகிழ்ச்சி என பதிலளித்து இருக்கின்றார்.
Glad that you had a wonderful experience in Kashi. https://t.co/e74hLfeMj1
— Narendra Modi (@narendramodi) November 2, 2022