பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதிகளில் இரண்டு நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே இருக்கும் மதுராபுரி துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (நவம்பர் 4) மற்றும் நாளை ( நவம்பர் 5) நடைபெற இருக்கின்றது.
இதன் காரணமாக மதுராபுரி, பெரியகுளம், தேனி மெயின் சாலை பகுதி, அன்னஞ்சி, கோம்பை, அனுக்கிரக நகர், மணிநகர் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகின்றது. இதனை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்திருக்கின்றார்.