பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் எலவந்தியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் மனைவி கோயிலுக்கு சென்ற வீட்டார். மகன் வேலைக்கு சென்று விட்டார்,
இவரும் இவரது மகளும் கள்ளிப்பாளையத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று விட்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கின்றார்கள். அப்போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் செயின் ஒரு பவுன் கம்மல் மற்றும் 18 பவுன் தங்க நாணயங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.