பிரபல சின்னத்திரை நடிகை, நடிகை தீபிகா படுகோனுக்கு டூப்போட்டு நடித்திருக்கின்றார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் நடிகை தீபிகா படுகோனே. சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் இவருக்கே நமது தமிழ் சின்னத்திரை நடிகை ஒருவர் திரைப்படம் ஒன்றில் டூப் போட்டு இருக்கின்றார். சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் என்ட்ரியான அஞ்சலி ராவ் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
இவருக்கு பட வாய்ப்புகள் சரிவர இல்லாமல் இருந்தால் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வந்து விடுவார். இந்நிலையில் இவர் கோச்சடையான் திரைப்படத்தில் தீபிகா படுகோனுக்கே டூப்போட்டு நடித்திருக்கின்றார். இந்த செய்தியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது