தினந்தோறும் நாகராஜ் மீண்டும் திரைப்படத்தை இயக்குகின்றார்.
தமிழ் சினிமா உலகில் 1998 இல் முரளி-சுவலட்சுமி நடிப்பில் வெளியான தினந்தோறும் திரைப்படத்தை நாகராஜ் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இத்திரைப்படத்திற்கு பின்னர் “தினந்தோறும் நாகராஜ்” என அவர் அழைக்கப்பட்டார். ஆனால் கால சூழ்நிலையால் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியாமல் போனது. இதன்பின் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார்.
சென்ற 2013 ஆம் வருடம் மத்தாப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் Q சினிமாஸ் தயாரிக்கின்றது. சத்யா இசையமைக்கின்றார். படத்தில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடந்து வருகின்றது. மேலும் ஜனவரியில் படபிடிப்பு ஆரம்பமாக உள்ளது.