கூடலூர் காபி வாரியம் சார்பாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காபி வாரியம் சார்பாக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா அலுவலக வளாகத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு காபி வாரியம் முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்க உதவி அலுவலர் ராமஜெயம் வரவேற்றார்.
இதன்பின் கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் சண்முகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் தூய்மை பாரதம் குறித்து பேசினார்கள். சுகாதார ஆய்வாளர் தூய்மையாக வைத்துக் கொள்வது, கொரோனா, டெங்கு, பறவை உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக தடுப்பு முறைகள் குறித்து பேசினார். இதன்பின் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டார்கள்.