ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நடத்தி வந்த கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கிராமப்புறங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இதுபோலவே அனுமதிக்க படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போருக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது.
இது குறித்து பல புகார்கள் நகராட்சி நிர்வாகத்திற்கும் போலீசருக்கும் சென்ற நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 50 கடைகள் அகற்றப்பட்டது. அப்போது போலீசார் நகர்வு கடைகளை அப்புறப்படுத்தியதோடு கடைகளில் இருந்த பொருட்களையும் அகற்றினார்கள்.
இதனால் கடை உரிமையாளர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே படம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இதன்பின் இனி ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என என போலீசார் எச்சரிக்கை விடுத்தார்கள்.