Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள்”….. பெற்றோர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!!!!

தீவட்டிபட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கின்றது. இப்பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்திருக்கின்றார். அப்போது அவரின் அறை பூட்டு மற்றும் வகுப்பறை பூட்டுகளை திறக்க முயன்ற போது சாவி போடும் துவாரத்தில் பசை போட்டு ஒட்டப்பட்டிருந்தது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் வராண்டாவிலேயே அமர்ந்தார்கள்.

இது குறித்து தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தார்கள். பள்ளியில் இதுபோல தொடர்ந்து வகுப்பறை பூட்டில் பசை வைப்பவர்களையும் பள்ளி வளாகத்தில் போதை பொருட்களை பயன்படுத்தும் மர்ம நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இப்பூட்டை உடைக்கக்கூடாது என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் தகவல் அறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை பூட்டு மற்றும் வகுப்பறைகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு மாணவ-மாணவிகளை வகுப்பறையில் அமர வைத்தார்கள்.

 

Categories

Tech |