தூத்துக்குடியில் போலி ரசீது செய்து கொடுத்து நிலக்கரியை கடத்திச் சென்ற இரண்டு லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகர் 1-வது தெருவை சேர்ந்த ராகுல் அமீது என்பவர் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் போக்குவரத்து மேலாளராக வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று இவரின் நிறுவனத்தின் பெயரில் இரண்டு லாரி ட்ரைவ்ர்கள் வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீதை கொடுத்திருக்கின்றார்கள்.
இதன் மூலம் அவர்கள் நிலக்கரி லோடு கடத்திச் சென்றதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து சாகுல் அமீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு டிரைவர்களை தேடி வருகின்றார்கள்.