எட்டயபுரம் அருகே பால்வடிந்த வேப்ப மரத்திற்கு கிராம மக்கள் பூஜை செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே இருக்கும் மேலப்பட்டி கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் சென்ற மூன்று நாட்களாக பால் போன்ற திரவம் வெளியேறி வந்திருக்கின்றது.
இதனை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடன் பார்த்திருக்கின்றார்கள். வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை அப்பகுதி மக்கள் பார்த்ததோடு மரத்திற்கு மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து ஆராதனை காட்டி பூஜை செய்து வழிபாடு செய்தார்கள்.