கல்கி அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடியை பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள்.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. நேற்று மாலை இயக்குனர் மணிரத்தினமும் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரனும் இணைந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை அலுவலகத்திற்கு நேரில் சென்று கல்கியின் மகன் ராஜேந்திரனை சந்தித்தார்கள். இச்சந்திப்பின்போது அறக்கட்டளைக்கு மணிரத்தினம் மற்றும் சுபாஸ்கரன் 1 கோடிக்கான காசோலையை கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார்கள்.