நூதன முறையில் சூட்கேசுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை இளைஞரை கைது செய்தார்கள்.
சென்னை உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதன்பின் அவரின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. பின்னர் ட்ராலி சூட்கேட்ஸில் ஜிப் பகுதியில் தையல் போடப்பட்டது போல இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தையலை பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை கம்பி போல் மாற்றி சூட்கேஸுக்குள் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது. 46,24,000 மதிப்பிற்கு 1 கிலோ 38 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.