கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இந்த உற்பத்தி நிலையத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக நான்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். சென்ற 3-ம் தேதி வரை 1667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வினாடிக்கு 150 மெகா வார்ட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி தேனியில் பரவலாக பெய்து வருகின்றது. மேலும் நெல் அறுவடை பணிகளும் நடந்து வருகின்றது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்திருக்கின்றது.
இதன் விளைவாக நேற்று காலை முதல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்த விடப்படும் தண்ணீர் அளவு 1667 கன அடிகளிலிருந்து 511 கனஅடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்திலும் இரண்டு ஜெனரேட்டரில் மட்டும் தலா 23 மெகாவாட் வீதம் 46 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.