21 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தஞ்சை பீரங்கி மேடு புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோவில் இருக்கின்றது. தஞ்சையில் ஆசியாவின் பழமையான நூலகமான தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம், ஆயுத கோபுரம் உள்ளிட்ட பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள் இருக்கின்றது. இந்த வரிசையில் ராஜகோபால் பீரங்கியும் ஒன்றாக இருக்கின்றது.
இந்த பீரங்கி தஞ்சைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். எப்போதும் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் இது தேனிருப்பு பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சை அரண்மனையின் கிழக்கு பகுதியில் ஏறத்தாழ 25 அடி உயரத்தில் மேடை இருக்கின்றது. இதில் பெரிய பீரங்கி அமைக்கப்பட்டிருக்கின்றது. பீரங்கி இருக்கும் இடத்தை பீரங்கி மேடு என்றுதான் அழைப்பார்கள்.
இது நாயக்கர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பீரங்கி வைக்கப்பட்டிருக்கும் கட்டிட அமைப்புகளை சீரமைப்பதற்காக இந்திய தொல்லியல் துறை முடிவு செய்திருக்கின்றது. அதன்படி 21 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது மேடையில் தரைப்பகுதியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கட்டிடச் சுவர்களை சீரமைக்கும் பணியானது மும்முரமாக நடந்த வருகின்றது. மேலும் விரிந்த சுவர் இருக்கும் பகுதியில் புதிதாக சுவர் கட்டும் பணியும் ஆரம்பமாகியுள்ளது. 400 வருடங்களை கடந்த பீரங்கி மேடு தற்போது புதுப்பொலிவு பெற்று வருகின்றது. இதனால் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.