இயக்குனர் தமனின் பதிவு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க விஜய் ஒரு பாடல் பாடியிருப்பதாக செய்தி வெளியானது. தீபாவளியன்று படக்குழு வாரிசு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சங்கராந்திக்கு திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ வெளியாகி கவனம் பெற்றது. இதன் பின்னர் நேற்று காலை இசையமைப்பாளர் தமன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் !!! என குறிப்பிட்டு இருந்தார். அதன்படி நேற்று மாலை 05.30 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் விஜய் குரலில் தமன் இசையில் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் !! 🔥
With Anna @actorvijay 🖤#Ranjithame 🎧♥️💃#VarisufirstSingle 🔊 pic.twitter.com/ne2v2tFSXM
— thaman S (@MusicThaman) November 4, 2022