Categories
சினிமா தமிழ் சினிமா

ஹலோ புருஷா…! “இது மிகவும் தவறான செயல்”…. ரவீந்தர் செய்த செயலால் கண்ணீர் விட்ட மகா…!!!!!

ரவீந்தர் பதிவை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி செய்த விஷயத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டு இருக்கின்றார். அதில் முட்டையை வேக வைத்த மகாலட்சுமி அடுப்பை நிறுத்தாமல் விட்டுயிருக்கின்றார். இதனால் தண்ணீர் வற்றி முட்டை கருவும் அளவிற்கு சென்று இருக்கின்றது.

மேலும் இதை பதிவிட்டு ரவீந்தர் கூறியுள்ளதாவது, அவிச்ச முட்டை இந்த அளவுக்கு கருகி நான் இதுவரை பார்த்ததே இல்லை. மகாலட்சுமி நீ கண்டிப்பா என் எடையை குறைக்க வைத்து விடுவாய். புது வாழ்க்கை.. புது மனைவி… சூப்பர் கூக்.. எனக் கூறியிருந்தார்.

ravindar chandrasekaran

இதை பார்த்த மகாலட்சுமி கூறியுள்ளதாவது, ஹலோ புருஷா..! இது மிகவும் தவறான செயல் என்று அழும் ஸ்மைலியை பதிவிட்டு இருக்கின்றார். இதைப் பார்த்தவர்கள் கூறியுள்ளதாவது, இது ஒரு புது வகையான டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் போல, அவிச்ச முட்டை கருகி போய் நாங்களும் இப்போது தான் பார்க்கின்றோம். அண்ணா நீங்க பாவம், பார்த்து சாப்பிடுங்க எனக் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |