தனலட்சுமி அசீமை சள்ளை எனக் கூறியதற்கு கமல் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் எப்போதும் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது. கமல் அசீமை விளாசிய போது தனலட்சுமி சந்தோஷப்பட்டு புன்னகைத்தார். ஆனால் தனலட்சுமியை இந்த வாரம் கமல் விளாசினார். அசீமுடன் மோதியபோது தனலட்சுமி அவரை சள்ளை எனக் கூறினார். இதற்கு கமல் அதற்கு என்ன அர்த்தம் என கேட்டார். தனலட்சுமி திரும்பத் திரும்ப தொல்லை கொடுப்பது எனக் கூறினார். அதற்கு கமல் ஆமாம் சரிதான் எனக் கூறி அதற்காக ஒரு விளக்கமும் கூறினார்.
கமல் தெரிவித்ததாவது, தூண்டில் முள்ளில் இருக்கும் புழுவை சாப்பிட்டுவிட்டு தூண்டிலில் சிக்காமல் தப்பிக்கும் சிறிய வகை மீனின் பெயர்தான் சள்ளை. மீனவர்களுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது சள்ளை வந்தால் அன்றைய தினம் அவர்களுக்கு மீனே சிக்காது. இதைத்தான் வட்டார வழக்காக சள்ளை என சொல்ல ஆரம்பித்தார்கள். இது போல அசீமை இந்த வாரம் வெளியே அனுப்பி விட வேண்டும் என பல தூண்டில் போட அவர் சிக்காமல் சள்ளை போல் தப்பித்து விட்டார் எனக் கூறினார். இதை பார்த்த பார்வையாளர்கள் இதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே எனக் கூறியுள்ளார்கள்.