மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள்.
மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான quick support or any desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய சொல்லி செல்போனில் இருக்கும் விவரங்களை பதிவிட சொல்லி இதன் பின் ரூபாய் பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்து விடுகின்றார்கள். ஆகையால் பொதுமக்கள் இது போன்ற போலியான குறுஞ்செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் வேண்டாம். இது போன்ற குறுந்தகவல்கள் மின்வாரியத்தில் இருந்து வராது. அதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அவர் கூறியுள்ளார்.