ரஞ்சிதமே பாடல் ஒரே இரவில் சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியானது. இப்பாடல் வெளியான ஒரே இரவில் ஒரு கோடி பார்வையாளர்கள், ஒரு மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
விஜய் நடிக்கும் இப்படத்திற்கு முதன் முதலாக தமன் இசையமைத்துள்ளார். ரஞ்சிதமே பாடலில் விஜயின் நடனம், ராஷ்மிகாவின் கிளாமர், செட்டிங், பாடல் என ரசிகர்களை கவர்ந்து விட்டது. இப்பாடலில் விஜயின் முந்தைய பாடல்களின் யூடியூப் சாதனையை கடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.