Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் இருந்தால்…. இங்கே அனுப்பி வையுங்கள்… ஆட்சியர் தகவல்…!!!!!

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அனுப்பி வைக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரே அரசு ஆவணங்களை பாதுகாக்கும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவண காப்பகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிறுவனங்களின் நிர்வாகம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மேலும் நமது நாட்டின் முழுமையான வரலாற்றை அறிவதற்காக அரசு ஆவணங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் உள்ளிட்டவைகளிடம் இருக்கும் ஆவணங்களையும் ஆராய வேண்டும் என்பதற்காக தனிநபர், மத அமைப்புகள், மூன்று மாத கோவில்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஜமீன்தாரர்கள் உள்ளிட்டவைகளிடமிருந்து ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

ஆகையால் இது போன்ற பழமையான பயனுள்ள ஆவணங்கள் இருந்தால் ஆவணங்களை உதவி ஆணையாளர், மாவட்ட ஆவண காப்பகம் ,சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி எதிரே இருக்கும் சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |