நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது.
தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கின்றது. இந்த அணையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது.
தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் வினாடிக்கு 763 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. தற்போது நீர்மட்டம் 134.55 அடியாக உள்ளது.