Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக…. “தோட்டம் அமைக்கும் பணி தீவிரம்”….!!!!!

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மங்கலக்குடி ஊராட்சியில் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. இதற்கான பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டார்கள்.

இது பற்றி ஊராட்சி தலைவர் கூறியுள்ளதாவது, மங்கலக்குடி ஊராட்சியில் முன்னதாக காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு அதில் விளையும் காய்கறிகள் தினமும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைவான கற்பிணி பெண்கள், வளர் இளம்பெண்கள், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றார்கள். தற்போது 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் விரைவில் முருங்கை தோட்டம் அமைக்கப்பட இருக்கின்றது.

இத்தோட்டங்கள் உருவாக்குவதற்கு வேலிகள் அமைக்கும் பணி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் வாயிலாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பொது மக்களுக்கு இரும்பு சத்து அதிகம் தரும் முருங்கை கீரை மற்றும் காய்கறிகள் இலவசமாக கிடைக்கும் என கூறியுள்ளார்.

Categories

Tech |