சேலம் ரயில்வே கோட்டத்தில் சென்ற 10 மாதங்களில் 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 51 பேர் கைதாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சிலர் புகையிலை பொருட்களை ரயிலில் கடத்தி விற்பனை செய்கின்றார்கள். இதனை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதனால் மாநில எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு புகையிலை பொருட்களை தடுக்கும் பணியில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். சேலம், தர்மபுரி, ஓசூர், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ஐந்து ரயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் அமைக்கப்பட்டு தினமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதில் சென்ற 10 பாதங்களில் மட்டும் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 874 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் பிற மாநிலத்தைச் சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் அதிகபட்சமாக சேலத்தில் மட்டும் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 410 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் தலைமறைவாக இருக்கும் 30 பேரை போலீசார் தேடி வருகின்றார்கள்.