பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல் அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும் மேலும் வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் எனக்கூறி,
10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதை உச்ச நீதிமன்றம் எந்தவித கேள்வியும் எழுப்பாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இது சமூக நீதியின் மீதான தாக்குதல் என கூறியுள்ளார்.