Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விஜய், அஜித்-ஆல் தள்ளிப்போன ஆதிபுருஷ் ரிலீஸ்”…. இதான் சங்கதியா….!!!!!

ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத்திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கீர்த்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். அண்மையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் ஜூன் 16ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் vfx-ஐ சரி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதற்காக ஏற்கனவே 500 கோடி பட்ஜெட் தாண்டி தற்போது மேலும் 100 கோடியை செலவு செய்ய இருக்கின்றார்கள். ஆனால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அது என்னவென்றால் பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் படம் தள்ளி போயிருப்பதாக கூறப்படுகின்றது.

 

Categories

Tech |