மைனாவின் உறவினர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக செய்தி பரவி வருகின்றது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் நந்தினி. இவரின் அந்த கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டதால் இவருக்கு மைனா என்ற பெயரே பிரபலமானது.
இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் மைனாவுக்கு மிகவும் நெருக்கமான உறவினர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக செய்தி பரவி வருகின்றது. அந்த நபர் வேறு யாரும் இல்லை. நம்ம ஏடிகே தான். இவர் மைனாவின் மாமன் மகன் என தற்போது செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஏடிகே-வின் முன்னாள் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.