கிரிக்கெட் வீரருடன் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை மக்கள் அன்புடன் கேப்டன் என்று அழைக்கின்றனர். பல வெற்றி படங்களை தந்து வந்த இவர் பிறகு அரசியலில் ஈடுபட்டார். தற்போது கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார்.
இவருக்கு உடல்நிலை சரியாகி பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பாக மேற்கிந்திய தீவு பிரபல கிரிக்கெட் வீரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.