கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக புகழ் வேட்டி சட்டையில் சென்று இருக்கின்றார்.
விஜய் டிவியில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார் புகழ். விஜய் டிவியில் இவர் கோமாளியாக பங்கேற்ற “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் ரீச்சானது.
தற்போது பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். மேலும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றார். அவர் மைதானத்தில் கருப்பு நிற வேட்டி சட்டையில் சென்றுள்ளார். அந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.