மணலி சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர் காக்கி சீருடைய அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாய் 500 அபராதம் விதித்திருக்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் மணலி விரைவுச் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதன்பின் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது காக்கி சீருடை அணியாமல் கண்டெய்னர் லாரிகளை இயக்குவதற்கு அனுமதி தருவதாகவும் நோ பார்கிங்கில் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தால் லாரி உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து அபராதம் விதிப்பதாகவும் கூறினார்கள். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.