Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் உடைந்து விழுந்த முள்ளுவாடி ரயில்வே கேட்”….. வாகன ஓட்டிகள் இல்லாததால் விபத்து தவிர்ப்பு….!!!!

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் நகரத்தில் முள்ளு வாடி ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில் வழித்தடமாக சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாச்சலம் செல்லும் பயணிகள் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில், சரக்கு ரயில் செல்லும் போது அங்கே கடுமையாக போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகும். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற 2018 ஆம் வருடம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியானது தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை பணி நிறைவு பெறவில்லை.

இதனால் பிரட்ஸ் ரோடு வழியாக வாகனங்கள் சென்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலை ஜங்ஷனிலிருந்து விருத்தாச்சலத்திற்கு பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தபோது கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடிய போது திடீரென பள்ளிவாசல் பகுதியில் இருந்த ரயில் கேட் உடைந்தது. அந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் யாரும் வராததால் விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் ரயில் செல்லும் வரையில் சங்கிலி பிடித்தவாறு பாதுகாப்பாக நின்றார்கள்.

Categories

Tech |