Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீண்டாமை வேலியை அகற்றுங்க…. அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக புகார்…. ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்….!!!!!

தீண்டாமை வேலியை அகற்ற வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் புகார் கொடுத்தார்கள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலுவபட்டி ஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. அதைச் சுற்றி காலி இடமும் இருக்கின்றது.

இந்த இடத்தில் அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் தீண்டாமை வேலி அமைத்து ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழிபாடு மற்றும் அதைச் சுற்றி இருக்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருக்கின்றார்கள். மேலும் மேடை அமைத்து நிகழ்ச்சியையும் நடத்துகின்றார்கள். மற்ற சமூகத்தினரை கோவில் வழிபாடு, குடிநீர் மற்றும் சாக்கடை வசதிகளுக்கு அனுமதிக்காமல் தொடர்ந்து இடையூறு செய்கின்றார்கள்.

இதனால் காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் நத்தம் புறம்போக்கான அப்பகுதியில் தீண்டாமை வேலி, மேடை உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என கூறியிருக்கின்றார்கள்.

Categories

Tech |