Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையமே….! உலர் சாம்பலை இலவசமாக வழங்குங்க…. ஆட்சியரிடம் கோரிக்கை….!!!!!

தூத்துக்குடி அனல் மின் நிலையம் உலர் சாம்பலை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் மற்றும் பிளாக்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சரவணன் மற்றும் மாநில தலைவர் துளசிராமன் உள்ளிட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள்.

அதில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தினமும் 3,500 டன் நிலக்கரி உலர் சாம்பல் கழிவு வெளியேறுகின்றது. இதில் 20% எங்கள் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஒதுக்கீட்டாணை புதுப்பிக்கப்படவில்லை.

இதனால் சென்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உலர் சாம்பல் வழங்கவில்லை. இதனால் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் எங்களுக்கு 20 சதவீத உலர் சாம்பலை தூத்துக்குடி அனல் மின் நிலையம் தொடர்ந்து இலவசமாக வழங்க வேண்டும் என ஒதுக்கீட்டானது புதுப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.

Categories

Tech |