Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிக்டாக் மோகம்… ஆண் நண்பருடன் நெருக்கம்… சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்ட மனைவி…. கணவரின் வெறிச்செயல்….!!!!!

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு செல்வதாக கூறியதால் மனைவியை கொலை செய்துள்ளார் கணவன்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். அவரின் மனைவி சித்ரா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அண்மையில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்தது. சித்ரா அப்பகுதியில் இருக்கும் ஒரு பனியன் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். இவர் சமூக வலைதளமான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அதிகம் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

ஆனால் அவரின் கணவருக்கு இவரின் செயல்பாடு மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தது, ஆண் நண்பருடன் சென்னைக்குச் சென்று அங்கு தங்கி நடிக்க வாய்ப்பு தேடியது பிடிக்கவில்லை. இதனால் அவரை கொலை செய்துள்ளார். இது குறித்து அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, எனது மனைவி சித்ரா சென்ற மூன்று வருடங்களாக இணையத்தில் வீடியோ பதிவிடுவதை ஆர்வத்துடன் செய்து வந்தார்.

இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் வீடியோவின் மூலம் சென்னையில் இருக்கும் ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் சித்ராவை சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறினார். இதனால் சித்ரா சினிமாவில் நடிக்க வேண்டும் என சென்னைக்கு செல்வதாக தெரிவித்தார். எனக்கும் எங்கள் குடும்பம் மட்டும் உறவினர்களுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அவர் வீட்டின் எதிர்ப்பை மீறி சென்னைக்கு சென்று சில மாதங்கள் தங்கினார்.

சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பாக மகளின் திருமணம் நடக்க வேண்டும் என்பதால் அவரை கட்டாயப்படுத்தி சென்னையில் இருந்து திருப்பூர் வர வைத்தேன். இதன் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்னை செல்வதாக கூறினார். நான் மறுப்பு தெரிவித்ததால் அவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

ஆனால் சென்னையிலிருந்து அவருக்கு வா வா என தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. இதனால் சென்ற 7-ம் தேதி சித்ரா என்னிடம் சென்னை போவதாக கூறினார். நான் வேண்டாம் என தெரிவித்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் நான் ஆத்திரம் அடைந்து துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

Categories

Tech |