ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் சென்ற மார்ச் 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொமரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு என்ற சுதந்திரம் போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்து இருந்தனர். இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டிருக்கின்றார்கள். இத்திரைப்படம் தற்போது ஜப்பானிலும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகிருக்கின்றது. ஜப்பான் பணத்தில் 185 மில்லியன் யென் வசூலித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.