சர்தார் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார்.
மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படம் நல்ல லாபத்தை கொடுத்ததால் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.