நீலகிரியில் கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் பயிரிட்ட கொய்மலர்களை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருக்கும் கொய்மலர் மொத்த விற்பனை சந்தைக்கு கர்நாடக அரசு சீல் வைத்திருக்கின்றது. இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்த கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றார்கள்.
இது பற்றி நீலகிரி மாவட்ட கொய்மலர் சாகுபடியாளர் சங்கத் தலைவர் கூறியுள்ளதாவது, நீலகிரியில் சாகுபடி மூலமாக ஐயாயிரம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலை கிடைக்கின்றது. இதனால் 300 பெட்டிகளில் கொய்மலர்களை விற்பனைக்காக அனுப்புகின்றோம். இதன் மதிப்பு ஐம்பது லட்சம் ஆகும்.
தற்போது பெங்களூரில் செயல்பட்டு வந்த கொய்மலர் மொத்த சந்தைக்கு மலர்களை அனுப்பி வந்த நிலையில் கர்நாடக அரசு அப்பகுதி குடியிருப்பு எனவும் அங்கு மலர் சந்தை வைக்க கூடாது எனவும் சீல் வைத்து இருக்கின்றது. இதனால் சாகுபடி செய்த மலர்களை அனுப்ப முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளோம். இதனால் எங்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான மலர்கள் சேதமடைந்திருக்கின்றது. ஆகையால் தமிழக அரசு நமது மாநில எல்லையில் கொய்மலர் மொத்த சந்தை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.