Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எழுந்த புகார்…. ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்… மரத்தை அகற்றாமல் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்…. நடவடிக்கை…!!!!!

நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது மரத்தை அகற்றாமல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யும் பணியானது சென்ற இரண்டு வருடங்களாக நடந்து வருகின்றது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுஞ்சாலை ஓரம் கட்டப்படும் பாலம் மற்றும் தடுப்புச் சுவர்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் கூடலூர் பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்விட்டார். அப்போது தடுப்புச் சுவர் மரத்துக்கு இடையே கட்டப்பட்டு இருப்பதை பார்த்தவர் மரத்தை அகற்றுமாறு உத்தரவிட்டார். இனி வரும் நாட்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்படும் என கூறினார். இதன்பின் கண்காணிப்பு பொறியாளர் ஊட்டி செல்லும் சாலையில் பார்வையிட்டார்.

Categories

Tech |