தூய்மை பணியாளர் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் துரைராஜ் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் சென்ற சில மாதங்களாக எனக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் என்னுடைய குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டு செலவு, மருத்துவச் செலவு ஆகியவைக்கு பணம் இல்லாமல் தவிர்த்து வருகின்றேன்.
இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என கூறியுள்ளார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, நான் 1997 ஆம் வருடத்தில் நிரந்தர பணியாளராக சேர்ந்தேன். எனக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சில சலுகைகள் சென்ற ஏழு வருடங்களாக கிடைக்காமல் இருக்கின்றது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால் காலம் தாழ்த்துகின்றார்கள். நான் தற்போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றேன் எனக் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.