Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க மறந்துட்டீங்களா?”…. கால அவகாசம் நீட்டிப்பு…. ஆட்சியர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்…!!!!!

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு புதுப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் பதினொன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு வருடத்தில் புதியது மற்றும் புதுப்பித்தல் செய்வதற்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால் தகுதியான சிறுபான்மையினர் மாணவ-மாணவிகள் அனைவரும் www.scholarship.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |