Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக திருவள்ளூரை மாற்ற வேண்டும்” … மக்களிடம் கேட்டுக் கொண்ட ஆட்சியர்…!!!!!

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பாக முதல்வரின் ஆணைக்கிணங்க மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருக்கும் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, இந்த எந்திரத்தின் மூலம் ரூபாய் பத்து செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம். திருவள்ளூரில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முன் பயன்பாட்டிற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. ஆகையால் இனி வரும் நாட்களில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்தி திருவள்ளூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |