Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல்…. விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி…!!!!

மடத்துக்குளம் வட்டாரத்தில் உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க வேளாண் உழவர் நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் 2022 வருடத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் பயறு வகை திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இது ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கின்றது.

இதற்கான தொகுப்பு செயல் விளக்கத் திடலில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி பாப்பான்குளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழிப்புணர்வு பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் ஆலோசகர் அரசப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி பங்கேற்று தொகுப்பு செயல் விளக்கத்திடலின் நோக்கம் மற்றும் அதில் வழங்கப்படும் இடுபொருள்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

Categories

Tech |