Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுங்கள்”…. வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்…!!!!!

விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தி இருக்கின்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கயத்தாறு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிராமங்கள் மற்றும் குறு வட்டாரங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடுத் தொகையை செலுத்த வேண்டும். சொந்த நிலங்களிலோ அல்லது குத்தகை நிலங்களிலோ விவசாய செய்யும் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

தற்போது பயிரிடப்பட்டிருக்கும் ராபி பருவத்தில் காப்பீடுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். உளுந்து, பாசி பயிர்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாகும். இதுபோல மக்காச்சோளம் பருத்தி பயிர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதி, சோளம், நிலக்கடலை பயிர்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி, கம்பு, சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு டிசம்பர் 31ம் தேதியும் காப்பீடு தொகையை செலுத்துவதற்கு கடைசி நாளாகும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |